1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:34 IST)

லட்சுமி கடாட்சத்தை பரிபூரணமாக பெற ஶ்ரீமகாலட்சுமி வழிபாடு !!

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு வஸ்திரம்,  தாமரை மாலை சாத்தி வழிபடுதல் சிறப்பாகும். வறுமை நீக்கி செல்வ செழிப்புடன் சகல சௌபாக்கியங்களுடன் நம்மை வாழவைக்கும் ஶ்ரீமகாலட்சுமி தேவியை வணங்க நன்மைகள் உண்டாகும். 

செல்வம். அதன் அதிபதியாகவும், அதை அள்ளி வழங்குபவளாகவும் திகழ்பவள் மகாலட்சுமி. அவளே வீரர்களிடம் வீரலட்சுமியாகவும், தேசத்தைச் செழிக்கச் செய்யும் ராஜ்ஜிய லட்சுமியாகவும், உணவுப் பொருட் களில் தான்ய லட்சுமியாகவும், யோகிகளிடம் யோக லட்சுமியாகவும், மனச் சலனங்களை நீக்கும் தைரிய லட்சுமியாகவும், பிள்ளைச் செல்வம் அருள்வதில் சந்தான லட்சுமியாக வும்,வீடுகளில் கிரக லட்சுமியாகவும், விளக்குகளில் தீபலட்சுமியாகவும் திகழ்கிறாள்.
 
தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுதல், தலைவாயிலைக் கழுவி கோலமிட்டு பூக்களால் அலங்கரித்தல், வெள்ளிக்கிழமை களில் வில்வத்தால் அர்ச்சித்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்குதல், இனிப்பு தானம், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றால், லட்சுமி கடாட்சத்தை பரிபூரணமாகப் பெறலாம்.
 
செல்வத்தை அள்ளித் தருபவளான ஸ்ரீமகாலட்சுமி தாயாரை அனுதினமும் வழிபடுவது அவசியம். வெள்ளிக் கிழமைகள், ஏகாதசி, கார்த்திகை மாத ஸ்ரீபஞ்சமி திதிகளில் வழிபடுவது சிறப்பாகும்.
 
துளசி, வில்வம், வாசனை மலர்களால் பூஜித்து, சர்க்கரை பொங்கல் அல்லது ஏதாவது இனிப்பு பலகாரங்கள் படைத்து வழிபடலாம். ஸ்ரீசூக்தம், ஸ்ரீலட்சுமி தந்திரம், ஸ்ரீஸ்துதி பாராயணம் செய்வது சிறப்பாகும்.