திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சிறப்புகள் நிறைந்த ஆடிப்பெருக்கு தினத்தில் வழிபாடு...!

ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம், தை முதல் ஆனி முடிய உத்தராயனம். இப்படி ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக வகுத்திருக்கிறார்கள் நம்  முன்னோர். இவற்றில், தட்சிணாயனம் மழைக்காலத் துவக்கத்தையும் உத்தராயனம் கோடைகாலத் துவக்கத்தையும் குறிப்பிடுகின்றன.
ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு 03.08.2018 ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை உலக நலன் கருதியும், காரிய  சித்தியும், பாப விமோசனமும் தரக்கூடியதும், வாக்கு, மனம், செயல் இவறால் செய்த பாபங்கள் போகவும் பாபம் போக்கும் பவானி ஹோமம், சூக்த  ஹோமங்கள், ஆடி கூழ் வார்த்தல் போன்ற வைபவங்கள் நடைபெறுவது வழக்கம்.
 
ஆடி மாதத் துவக்கத்தில் காவிரியில் வெள்ளம் வரத் தொடங்கும். ஆடிப் பதினெட்டு அன்று வெள்ளம் கரை புரண்டு ஓடும். அப்போது ஆற்றங்கரையில் கூடும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து பல வகையான சாதங்கள் செய்து கொண்டு வந்து, தங்களின் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அமர்ந்து  மகிழ்ச்சியாக உணவு உண்டு சந்தோஷத்தை பங்கிட்டுக் கொள்வார்கள்.
 
சூரியன் தெந்திசை நோக்கிப் பயணப்படுவதை தட்சியாயன புண்ணிய கால என்று குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்  பணிகளைத் தொடங்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம்.
 
ஆடி 18-ந் தேதி காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் இந்த நாளில்  புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம். மேலும் பக்தர்கள் ஆற்றில் குளித்து விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும், பெண் பக்தர்கள்  முளைப் பாரிகள் எடுத்து காவிரி ஆற்றில் விட்டு வழிபாடு செய்வார்கள்.