1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிலவகையான தானங்கள் செய்வதால் தோஷங்களை போக்குமா...?

ஆல், அரசு, வேம்பு இந்த மூன்று மரங்களுக்கும் நீரை ஊற்றுவது தெய்வங்களின் அருளை பெற்று தரும். பித்ருக்களின் ஆசி பெற தினமும் காக்கைக்கு எச்சில் படாத உணவு வைக்க வேண்டும். 

பித்ரு தோஷம் நீங்க அகத்திக்கீரை மற்றும் வெல்லம் கலந்த பச்சரிசியை பசுமாட்டிற்கு அடிக்கடி கொடுத்து வரவேண்டும். மீன்களுக்கு பொரி போடுவது சிறு  தோஷங்களை நீக்கும். அதனால் தான் கோவில் குளங்களில் பொரி போடுவதை வழக்கமாகக் கொண்டனர். 
 
கோவில்களில் அன்னதானம் செய்ய உதவுவதும், மக்களின் தாகம் தீர்க்க மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைப்போருக்கு உதவி செய்வதும் கஷ்டங்களை குறைக்கும். 
 
கோவில்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு தீபம் ஏற்ற எண்ணெய் தானம் செய்து வாருங்கள் கிரக தோஷங்கள் நீங்கும். கோவில்களில், மலை ஸ்தலங்களில் இருக்கும் குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுத்து உதவுங்கள். அனுமாரின் ஆசி கிடைக்கும். வீரமும், ஞானமும் பிறக்கும்.
 
உங்கள் வீட்டு மொட்டை மாடியில் தினமும் ஏதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள். தெருக்களில், போஸ்ட் கம்பங்களில் சிறிய வாளியில், தண்ணீரை கட்டி வையுங்கள். வாயில்லா ஜீவன்கள் அதில் தண்ணீர் குடித்த வந்தால் உங்களுக்கு எல்லா விதமான கிரக தோஷங்களும் நீங்கும்.  
 
தினமும் கோலமிடும் பொழுது கோலமாவு பயன்படுத்தாமல் பச்சரிசியை அரைத்து வைத்துக் கொண்டு அதில் கோலம் போட்டு பழகுங்கள். அதை உண்ண வரும் எறும்பு மற்றும் ஏனைய சிறு உயிர்களும் பசியாறுவதால் உங்களுடைய வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.
 
ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த போது முடிந்த அளவிற்கு உடுக்க உடையும், உண்ண உணவும் தானமாகக் கொடுப்பது தோஷத்தைப் போக்கும்.