செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 30 மே 2022 (11:24 IST)

அமாவாசை நாட்களில் ஏன் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்ப்பதில்லை...?

Amavasai
அமாவாசை நாட்களில், தர்ப்பணம் செய்யும் நாட்களில், மேலும் விரதம் இருக்கும் நாட்களில் வெங்காயம் பூண்டை தவிர்க்க சொல்கிறது இந்து மதம். இதன் காரணம் பலருக்கும் தெரியாது.


ஜோதிடம் வெங்காயம் மற்றும் பூண்டை ராகு கேது என்கிறது. அதனால் தான் அமாவாசை நாட்களில், தர்ப்பணம் செய்யும் நாட்களில், மேலும் விரதம் இருக்கும் நாட்களில் வெங்காயம் பூண்டை தவிர்க்க சொல்கின்றார்கள்.

அமாவாசையில் ஏன் வெங்காயம் மற்றும் பூண்டு உணவில் சேர்க்க கூடாது. அதேவேளை ஆயுர்வேத மருத்துவம் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள எப்போதும் பரிந்துரைப்பதில்லை. எனினும் மருத்துவ ரீதியாக ஆரோக்கிய நலன்களை கருத்தில் கொண்டு பூண்டு வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதத்தில் இந்த 5 நாட்களிலாவது பூண்டு வெங்காயத்தை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என சொலப்படுகின்றது. அதேபோல அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது, முன்னோர்களுக்கு இடும் படையலில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்வது சிறப்பான பலன்களை தரும்.