வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அம்மனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றப்படுவது ஏன்...?

கடவுள் சன்னதியில் ஏற்றப்படும் தீபம்களில் மாவிளக்கு தீபம் ஒன்று. இதை பிரார்த்தனையாக செய்வது வழக்கத்தில் உள்ளது. 

அதுவும் ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. இது பல காலமாக முன்னோர்களால் செய்யப்பட்டு வரும் ஒரு பிரார்த்தனை. 
 
பச்சரிசி மாவையும், வெள்ளை சர்க்கரை, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் சேர்த்து சிறிது நெய் விட்டு மாவாக பிசைந்து அதை வாழை இலையின் நடுவே விளக்கு போல் அமைத்து, அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, தெய்வ சன்னதியில் முக்கியமாக அம்மன் சன்னதியில் வைத்து  வழிபாடு செய்தல் மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது.
 
இவ்வாறு செய்யும் போது குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் எந்தவித தடங்கலுமின்றி நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
 
ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வருடத்துக்கு ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்கு சென்று அங்கு உரலில் பச்சரிசி மாவு இடித்து, தீபம் ஏற்றினால் குடும்பம் மென்மேலும் செழிக்கும் என்று நம்பப்படுகிறது.