செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆடி கிருத்திகை அதிக விசேஷமானது ஏன்...?

முருகனுக்கு உகந்த நாட்களில் கிருத்திகை முக்கியமான ஒன்றாகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபடுவது சிறந்தது என்றாலும். ஆடி கிருத்திகை அதிக விசேஷமானது ஆகும். 

முருகனின் திருநாமங்களில் ஒன்று கார்த்திகேயன். சிவனின் நெற்றிக்கண்களில் இருந்நு வெளிப்பட்ட தீப்பெறிகளில் ஆறு குழந்தைகளாய் சரவண பெய்கை தாமரை மலர்களில் தோன்றிய முருகவேளை, வளர்த்தெடுக்கும் பெறுப்பை ஏற்றவர்கள் கார்த்திகை பெண்கள் என்பதால் முருகன் கார்த்திகேயன் என்ற திருநாமம் பெற்றான்.
 
ஈசன் அருளால் 27 நட்சத்திரங்களில் ஒருவராக கார்த்திகையும் இடம் பெறும் பேறு பெற்றனர். அந்த கார்த்திகை அதாவது சொல்வழக்கில் கிருத்திகையில் முருகனை வழிபட்டால் சகல ஐஸ்வரயங்களும் கிட்டும். அதிலும் ஆடி கிருத்திகையில் வழிபட முருகன் கேட்ட வரமெல்லாம் தந்தருவான் என்பது நம்பிக்கை. எனவே தான் ஆடி கிருத்திகை அன்று முருகன் ஆலயங்களில் கூட்டம் அலைமோதும். காவடி எடுத்து வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து முருகப்பெருமனை  வணங்குவது வழக்கம்.
 
அதுவன்றி வீட்டிலும் குளித்து தூய்மையாக விரதமிருந்து நியமங்களை கடைபிடித்து முருகனை படத்திற்கு மலர்கள் சாத்தி, நைவேத்தியங்கள் படையலிட்டு வழிபாடுகள் செய்வதும் மிகுந்த பலனைத் தரும். வீட்டில் விளக்கேற்றி வைத்து காலை மாலை வேளைகளில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ் பாடல்கள் உள்ளிட்ட முருகனுக்கு உகந்த பாடல்களை பாடி வழிபட கவலைகள் அகலும் மனம் அமைதி பெறும். நோய்நொடிகள் விலகும். தீய வினைகள்  அணுகாமல் காப்பு உண்டாகும்.
 
வறுமை, கடன் தொல்லைகள் நீங்கி குடும்பத்தில் செழிப்பு ஏற்பட்டு சந்தோஷம் பெருகும். சாந்தி நிலவும். முருகன் வழிபட்டால் எதிரிகள் விலகுவார்கள். பகைத்தவர்கள் கூட மனம்மாறி நண்பர்களாவர். எடுத்த காரியங்களில் தடைகள் விலகி ஜெயம் உண்டாகும்.

தொழில் வியாரங்களில் போட்டி, பொறாமைகள்  அகன்று நல்ல லாபம் வந்து சேரும். கிருத்திகையில் விரதமிருத்து மனத்தூய்மையுடன் உளமுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை எல்லாம் வழங்கி  வாழவைப்பான் முருகன்.