எந்தெந்த ராசிகாரர்கள் கோமேதக கல் அணியலாம்....?
வைரம், மாணிக்கம், முத்து, பவளம் என நவரத்தினங்களை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று மோதிரமாகவும் அல்லது கழுத்தில் செயினுடன் சேர்த்தோ அணிகிறோம்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் ஏற்ற ராசி கற்கள் உள்ளன. ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அந்த வகையில் கோமேதக கல் யாரெல்லாம் அணியலாம். அவ்வாறு அணிவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்.
நவரத்தினங்களில் ஒன்றாக கோமேதகம் விளங்குகிறது. இது காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். சில வகையான கற்கள், தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். பழங்கால நூல்களில் கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்படுகிறது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்குக் கோமேதகம் என்று பெயரிட்டனர்.
தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான, எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது இந்தக் கல். பண வரவை அதிகரிக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனைக் கொடுக்கும்.
வாத நோய்களையும், பித்த நோய்களையும் நீக்கும் தன்மை உடையது. இதன் பஸ்பமானது இரத்தப் புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும். நல்ல உடல் அழகையும், நரம்புகளுக்குப் புத்துணர்வையும் தரும்.
ராகு திசை நடப்பவர்கள் கோமேதகம் அணிவதன் மூலம் இல்லற வாழ்வில் இனிமை உண்டாகும். சொத்து வகையில் மேன்மை கிடைக்கும். பங்காளிகள் வகையில் உதவி கிடைக்கும். பாரம்பரிய தொடர்பு கிட்டும். அரசு அனுகூலப் பதவியில் உயர்வைக் கொடுக்கும்.
அணிய வேண்டிய நட்சத்திரங்கள்: திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்கார்கள் மற்றும் எண்கணிதபடி 4, 13, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.