வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எந்த கிழமையில் எந்த தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது உகந்தது...?

திங்கட் கிழமை என்பது, சிவனுக்கு மிகவும் உகந்த தினமாகும். சிவனை நினைத்து, அவருக்காக விரதமிருந்து வழிபட்டு பால், அரிசி, சர்க்கரையையும், பழங்களையும் நைவேத்தியமாக சமர்ப்பணம் செய்திடலாம்.
செவ்வாய் கிழமை தினமானது, அனுமன், முருகப்பெருமான், துர்க்கை, போன்ற தெய்வங்களுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதமிருந்து,  ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால், அனைவரது வாழ்க்கையிலும் ஒளியும், வளமும் நிச்சயமாக பெருகும்.
 
புதன் கிழமையன்று, கணபதியை வணங்கி சுப காரியத்தை தொடங்கி, உலகின் முதல் கடவுளான விநாயகரை வணங்கினால் உறுதியான,  வெற்றி கிடைக்கும்.
 
வியாழன் கிழமை என்பது, குருவின் தினமாகும். வியாழன் விஷ்ணு பகவானுக்கும் உகந்த தினமான வியாழன் தினத்தில், அவரின்  துணைவியான லக்‌ஷ்மி தேவியை வணங்கிடவும், உகந்த நாள். தட்சிணாமூர்த்தி வடிவமான, குருவின் வழிபாடு செய்திடவும் உகந்த நாள்  வியாழன்.
 
வெள்ளிக் கிழமைஎன்று, துர்க்கை விரதம் இருப்பதன் பலனாக, துர்க்கை அம்மநின் பலவிதமான அவதாரங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.பெண் தெய்வங்களின் வழிபாட்டிற்கு ஏற்ற நாள் வெள்ளிக்கிழமை .
 
சனிக் கிழமைஎன்று, திருமால், ஆஞ்சநேயர், காளி தேவி ஆகியோரை, வழிபடுவதற்கு, ஏற்ற நாளாக போற்றப்படுகின்றது. சனி பகவானை பூஜிப்பதற்கும் ஏற்ற நாளான சனிக்கிழமை, பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் ஏற்றதாகும்.
 
ஞாயிறு கிழமைஎன்று நவகிரகத்தின் நாயகனான சூரிய பகவானுக்கு ஏற்ற தினமாகும். ஞாயிற்று கிழமைகளில் விரதம் இருந்து, பூஜித்தால் சூரிய தோஷம் விலகி அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி மகிழ்வு பெருகும் என்பகது திண்ணமாகும்.