வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

எந்த காரியமாக இருந்தாலும் தடைகளை நீக்கும் மந்திரங்கள்!!

தடை விளகும் வெட்டு மந்திரம்: தடை வெட்டு மந்திரம் இது வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும் சரி. மாந்திரீகமாக  இருந்தாலும் சில தடைகள் ஏற்படும். எந்த காரியமாக இருந்தாலும் வெற்றியடைய முயற்சிக்கும்போது இந்த மந்திரங்களை பயன்படுத்தலாம்.
முதலில் வினாயகர் வெட்டு மந்திரம் பயன்படுத்தி தேங்காய் வெட்டி பின்னரே மற்ற வெட்டு மந்திரங்கள் உபயோகிக்க வேண்டும்.
 
வினாயகர் வெட்டு மந்திரம்: ஓம் கங் கங் கணபதி கவுரி புத்திராயா விக்கன வினாயக மூர்த்தியே உன்னோடெதிர்த்த கஜமுகா சூரணை  சங்ஙரித்தால் போலே என்னோடெதிர்த்த சத்திராதிகளையும் சர்வ தடங்கல்களையும் சங்ஙரி சங்ஙரி சக்தி புத்திராயா சர்வ தடைகளையும் அறு  அறு சுவாகா.
மூல மந்திரம்: ஓம் றாங் றீங் வினையறு கங் கங் கணபதி கவுரி புத்திராயா நம.
 
தேங்காய் வெட்ட: தேங்காய் எடுத்து மஞ்சல் சந்தனம் பூசி அதில் கற்பூரம் ஏற்றி 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து (அட்சரத்தில்)  வெட்டவும். ஒரே வெட்டாக இருக்க வேண்டும் அப்போது தேங்காய் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றால் தடை விளகியது என்று அர்த்தம்,  ஒரு பக்கம் கவுந்தாலும் அல்லது இரண்டும் கவுந்தாலும் தடை இருக்கிறது என்று அர்த்தம், தடை விளகும் வரை தேங்காய் வெட்டலாம்.