வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சனி பகவான் தாக்கத்தில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும்...?

நவக்கிரகங்களில் சனி பகவானை மற்ற தெய்வங்களை வணங்குவது போல, நேருக்கு நேராக நின்று தரிசனம் செய்யக்கூடாது. பக்கவாட்டில் நின்றபடி வழிபடுவது நல்லது. பொதுவாக சனி பகவானுக்கு அடக்கத்துடன் இருப்பவர்களை மிகவும் பிடிக்கும்.

சனிக்கிழமையில் சனி பகவானிற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சனி தோஷத்தை போக்கும். கரிய நிறம் கொண்ட சனி பகவான் ஜோதிட சாஸ்த்திரத்தில்  ஆயுள் காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர். சூரி பகவானின் இரண்டாவது புதல்வர் போன்ற பல பெருமைகளைக் கொண்டவர் சனி பகவான்.
 
புரட்டாசி மாதம், சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில், சூரிய பகவானிற்கும், சாயாதேவிக்கும் சனிபகவான் பிறந்தார். அதனால் தான் புரட்டாசி மாதம் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருப்பதுடன், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட பெருமாளை பயபக்தியுடன் வணங்கி  வழிபடுகிறோம்.
 
சனி பெயர்ச்சி நாளில் கர்ம காரகனான சனி பகவானின் அருளை பெற அனைத்து ராசியில் பிறந்தவர்களுமே வணங்குவது நல்லது. சனி பகவானின் பிறப்பையும், அவரது பெருமையையும் படிப்பவர்களுக்கு அவரது பரிபூரண அருள் கிடைக்கும்.