ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 28 மே 2022 (16:12 IST)

சிவ வழிபாட்டுக்கு வில்வம் உகந்ததாக இருப்பதற்கான காரணம் என்ன....?

வில்வம் என்பது அகத்தில் நிறைந்து நிற்பது என்று பொருள். அதாவது உள்ளே நிறைந்து நிற்பது என்று பொருள்.  நம்முடைய பூமியில் பல விதமா தாவரங்கள் உள்ளது என்று நாம் அறிவோம்.


இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள். வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும். வில்வமரம் நெருப்பு அம்சம் (பனி கட்டி) உடையது. இதில் உள்ள ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது. இதை வேறு விதமாக கவனிக்க வேண்டும்.

சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும். இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும். சிவ பெருமான் தொழிலே தவறான செயல்களை அழிப்பது தான்.

நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது. அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல். கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும். இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும்.

ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனிமலையில் உள்ள வெப்பம். சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவபெருமான் மறைமுக நெருப்பு, சக்தி தேவி வெளி நெருப்பு சிவ பெருமான் உள்ளுக்குள் நெருப்பு.

பனிக்கட்டிகளை கைகளில் வைத்து இருந்தாலும் உள்ளே வெப்பம் உண்டாகும். நெருப்பு கதிர்களை கைகளில் பிடித்து கொண்டால் வெளியே வெப்பம் உண்டாகும்.

சித்தர்கள் வில்வ மரத்தை பற்றி சொல்லும் சிவ வழிபாடு செய்த அசுரர்கள் சைவர்களாக மாறி சிவகதி அடைந்து சதுரகிரி மலை தலத்தில் வில்வமாக மாறி பெருமானுக்கு சேவை செய்வதாய் சொல்கிறார்கள். இவர்களை வழிபாடு செய்து விட்டு தான் இலைகளை பறிக்க சொல்லி உள்ளார்கள்.

சில விதி முறைகள் வில்வ இலைகளை பறிக்க உண்டு.  அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அஷ்டமி, நவமி, சதுர்த்தி நாட்களில் வில்வம் இலைகளை பறிக்கக் கூடாது. முன் நாட்களில் பறித்து கொள்ள வேண்டும். வில்வ இலைகளை சுத்தம் செய்து எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வில்வம் காய், பழத்தை யாகத்துக்கு பயன்படுத்தலாம். வில்வதளத்தை பறித்த பிறகு 6 மாதம் வரை வைத்து வீட்டில் பூஜை செய்யலாம்.

உலர்ந்த வில்வமும் புனிதமானது. எங்கு வில்வமரம் அதிகம் உள்ளதோ அங்கு பனிமலை தன்மைகள் உண்டாகும்.