1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:30 IST)

வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு ஏற்ற நாளாக இருப்பதற்கான காரணம் என்ன...?

சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்திற்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இவருக்கு ஊமைத்துரை, மௌனச்சாமி என்ற பெயர்கள் உண்டு.


மௌனமாக இருப்பது வழிபாட்டு வகைகளில் ஒன்றாகும். மௌனத்தில் மூன்று வகை உண்டு. அவை உடல் மௌனம், வாக்கு மௌனம்,  மன மௌனம் என்பன.

உடலைச் சிறிதும் அசைக்காமல் கட்டைபோல இருப்பது உடல் மௌனம். இவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டி தியானத்தில் ஆழ்ந்திருப்பர். வாக்கு மௌனம் என்பது பேசாமல் அமைதி காப்பதாகும். மனதாலும் மௌனமாக இருப்பதே மன மௌனம்.

இந்த மௌனங்களை கடைபிடிப்பவர்கள் ஞானநிலை எய்துவதுடன், கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுகிறார்கள். மேலும், தொட்டது துலங்கும்.

ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்: வியாழக் கிழமைதோறும் சிவன் கோவிலுக்கு சென்று, அங்கு பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அர்ச்சனை அல்லது கற்பூர ஆரத்தி செய்து வணங்கி வருவது நல்லது.