தொடர்புடைய செய்திகள்
- கோவில்களில் விக்கிரகங்களை கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம் என்ன...?
- நடிகை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதில்லை: மத்திய அரசின் வழக்கறிஞர் தகவல்
- விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் தத்துவங்கள் என்ன...?
- சிறப்பான பலன்களை பெற்றுத்தரும் வெள்ளெருக்கு செடி...!!
- கடை ஊழியரை கொலை செய்த ஜோதிடர்? கோவில் வளாகத்தில் பிணம்! – கடலூரில் பரபரப்பு!
திருப்பட்டூரில் அமைந்துள்ள கோவிலின் சிறப்புகள் என்ன...?
திருப்பட்டூர் தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
* திருப்பட்டூர் காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணரை வணங்கி தொழுததால், ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.
* திருக்கயிலாய ஞான உலா என்னும் நூல் அரங்கேறிய இந்தத் தலத்தில், கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், பின் அவர்களே இறைவனாக மாறிப்போவதும் நிகழும் என்பது ஐதீகம்.
* சிவபெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.
* சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர். அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக் கொண்டது திருப்பட்டூர் என்ற இந்த திருத்தலத்தில் தான்.
* பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
* பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரம்ம சம்பத் கவுரி என்ற திருநாமத்துடன் அம்பாள், கனிவு ததும்ப.. கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் புடவை சாத்தி வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் இனிதே நடைபெறும்.
அடுத்த கட்டுரையில்
