வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஜீவ நாடி என்பது என்ன?; அகத்தியர் சிறப்பு

ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை.  எனவே  ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். 
ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு  வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல்  ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.
 
“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும்,  மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி  நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்றாக உள்ளது..