வீட்டில் அஷ்டலட்சுமி குடியேற நாம் என்ன செய்ய வேண்டும்...?

Ashta Lakshmi
Sasikala|
முதலில் தினமும் விடியற்காலையில் எழுந்து நம் வீட்டின் வாசலில் பசு மாட்டு சாணம் தெளித்து அதன் பின் தவறாமல் கோலம் போட வேண்டும். அடுத்தாக அதிகாலையிலே நீராடி இறைவனை வணங்கி அதன் பின் சமைக்க வேண்டும்.

தினமும் காலை சூரிய பகவானை வணங்க வேண்டும். தேவாரம், திருவாசகம் பாடல், கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் வாசித்தல் வேண்டும். மேலும்  அன்னதானம் போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையேனும் வீட்டை கழுவி விடவேண்டும்.
 
திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தவறாமல் விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும். முடிந்தவரை மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்ய  வேண்டும். 
 
வீட்டின் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி நாம் தெய்வத்தை வழிபட்டால் வீட்டில் அஷ்ட லக்ஷ்மி குடியேறி மகிழ்ச்சியை ஏற்படுத்துவாள்.
 
ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளைச் சொல்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் இந்த அஷ்ட லட்சுமிகளையும் மறக்காமல் துதித்து வந்தால், வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும். 
 
வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நீராடி, தூய்மையான ஆடை உடுத்தி, குலதெய்வத்தை மனதுள் நிறுத்தி, உத்தரவைப் பெற்றுக் கொண்டு விநாயகர் பூஜையை துவங்குங்கள். கணபதி பூஜையை முடித்து விட்டு, இந்த அஷ்டலட்சுமிகளையும் வழிபட்டு வர, வாழ்வில் அனைத்து வளங்களும்  கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :