வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மணி அடிப்பதில் பின்பற்றவேண்டிய சாஸ்திர முறைகள் என்ன...?

கோவிலிலும் சரி,வீட்டிலும் சரி பூஜை செய்யும் போது மணி அடிப்பது வழக்கம். சாதாரண மணி தானே என நாம் எண்ணிவிடக் கூடாது. மணி அடிப்பதால் உள்ள நன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் பல உண்டு.
 

மணி அடிப்பதிலும் ஒரே மாதிரியாக மணியை அடிக்கக் கூடாது.மெதுவாக மணியை அடித்தால் அகர்பத்தி சமர்பிக்கப்படுகிறது என்று பொருள். கணகணவென்று அடித்தால் சாமிக்கு தீபம் அல்லது தூபம் காட்டப்படுகிறது என்று பொருள். இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிரது என்று பொருள். மெதுவாக சீராக அடித்தால் இறைவனுக்கு அமுது படைக்கப்படுகிறது என்று பொருள்.
 
மணி அடிப்பதன் தொனியை வைத்தே கோவிலில் நடக்கும் பூஜைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். மணியை எப்போதும் நம் இடது கையால் எடுக்கக் கூடாது. மணியை வலது கையில் எடுத்து பின்னர் இடது கையில் மாற்றிக் கொண்டு,வலது கையால் கற்பூர தட்டை எடுத்து ஆரத்தி காட்ட வேண்டும். அதே போல் மணியை கீழே வைக்கும் போதும் அதே முறையை பின்பற்றவேண்டும்.
 
மணியின் கண்டை என்பது சாதாரணமானதல்ல. மணிகளில் ஓம் என்ற பிரணவம் ஒளிந்திருக்கிறது. தேவதைகளை வரவழைத்து துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகின்றது. பகவானுக்கு அமுது படைக்கும் போது நிசப்தமாக இருக்க வேண்டும்.அமங்கல பேச்சுக்கள் காதில் விழக்கூடாது என்பதற்காக மணி அடிப்படுகிறது. அதனால் அப்படிப் பட்ட பேச்சுக்கள் காதில் விழாது.
 
பூஜையின் போது அடிக்கப்படும் காண்டமணி மிக சப்தமாக ஒலித்து பிற தீங்கான சப்தங்கள் அழுத்திப் போகச் செய்யும். வழிபாட்டின் போது வீட்டிலும் பூஜை மணி ஒலிப்பது நன்மை தரும். வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டும் போது மணியடிப்பது நல்லது.
 
பூஜைப் பொருளில் ஒன்றான மணியை இஷ்டம் போல நினைத்த நேரமெல்லாம் அடிக்கக் கூடாது. அபிஷேகத்தின் போதும், சாம்பிராணி காட்டும் போதும், தீபாராதனை வேளையிலும், நைவேத்யம் செய்யும் போதும், ஆபரணம் அணிவித்து அலங்கரிக்கும் போதும், நீராஞ்ஜனம் என்னும் கற்பூர ஆரத்தியின் போதும் மணியோசை எழுப்ப வேண்டும்.