புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எந்தெந்த நாட்களில் தூபம் போடுவதால் என்னென்ன பலன்களை பெறலாம்..?

வீட்டில் தினமும் தூபம் போடுவது மிகவும் நல்லது. அந்த வகையில் எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. வீட்டில் சாம்பிராணி போடுவதால் வீட்டில்  உள்ள கெட்ட சக்திகளின் ஆதிக்கம் குறைந்து தெய்வ கடாட்சம் நிறைந்து காணப்படும்.
 
சாம்பிராணி தினமும் போட முடியவில்லை என்றாலும் வாரத்தில் இரண்டு முறை அதாவது செவ்வாய்,வெள்ளி போன்ற மங்கள நாட்களில் சாம்பிராணி போடுவதின் மூலம் மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
 
ஹோமம் செய்வதற்கு நிகரான ஒன்றாகும். ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின் மூலம் கிடைத்து விடும்.
 
ஞாயிறு - ஆத்ம பலம், சகல செல்வாக்கு, புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்.
 
திங்கள் - தேக, மன ஆரோக்கியம், மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.
 
செவ்வாய் - எதிரிகளின் போட்டி, பொறாமை மற்றும் தீய-எதிர்மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள், கடன் நிவர்த்தி.
 
புதன் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.
 
வியாழன் - சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
 
வெள்ளி - லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.
 
சனி - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிட்டும்.