வெங்கமேடு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

கரூர் - வெங்கமேடு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பெற்றனர்.
கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் மெயின்ரோட்டில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது அதற்கு முன்னதாக முதல் மற்றும் இரண்டாம், மூன்றாம், நான்காம் கால பூஜைகளும், யாக வேள்வி, மஹாபூர்ணஹூதி, தீபாதரானை நடைபெற்றது. 
 
தொடர்ந்து புனித காவிரி தீர்த்தங்கள் மேளதாளங்கள் முழங்க, கலசத்திற்கு கொண்டு சென்று பின்னர், கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பரிவார தெய்வங்களுக்கும் அருள்மிகு சத்தி விநாயகர் மூலவ மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர் பின்பு அன்னதானம் வழங்கப்பட்டதை இந்நிகழ்ச்சியை பாலமுருகன் சிவாச்சாரியார்  பரம்பரை அர்ச்சகர் மற்றும் சரவணபவ சிவ சிவாச்சாரியார் மற்றும் ஆலய நிர்வாகிகள் என்றும், பக்தர்கள் பல ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :