புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (08:49 IST)

வைகாசி மாத ராசிபலன்கள் 2023! – கடகம்!

Monthly Astro Image
கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, ராகு, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

30-05-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

01-06-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நியாயமுள்ளவர்களுக்காகவும் நலிந்தவர்களுக்காகவும் பாடுபடும் குணமுடைய கடக ராசி அன்பர்களே இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு சக கலைஞர்கள் பொறாமை கொள்வார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும்.

அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் மேன்மை ஏற்படும்.

புனர்பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

பூசம்:

இந்த மாதம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.  நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

ஆயில்யம்:

இந்த மாதம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமையில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 3, 4, 30