எந்த தெய்வத்திற்கு எத்தனை முறை வலம் வரவேண்டும்...?

ஒவ்வொரு தெய்வத்தையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். பிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும். ஒவ்வொரு கடவளுக்கும் இத்தனை முறைத்தான் வலம் வரவேண்டும் என்பது ஐதீகம்.
கோவிலுக்குள் எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வரவேண்டும் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றோ பெயரளவில் ஒரு முறை அல்லது 3 முறை வலம் வருதல் என்று வழக்கமாகிவிட்டது.
 
* விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். 
* ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும். 
* அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும். 
* மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும். 
* நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும். 
* சூரியனை 2 முறை நம்மை நாமே சுற்றி கொள்ளவேண்டும். 
* தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வரவேண்டும்.
 
கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.
 
ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும்  விழுந்து வணங்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :