புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சித்திர குப்தனை நினைத்து சித்திரா பெளர்ணமி நாளில் வழிபடுவதன் பலன்கள்...!

ஒவ்வொரு மாதங்களில் வரும் பெளர்ணமி விசேஷமானது. அதுவும் சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியைப் பற்றி மிகவும் சிறப்புமிக்க  நாளாகும்.
சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் "சித்ரா பெளர்ணமி "கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தான் அன்னை பார்வதி தேவி தன் கைத்திறமையால் ஒரு அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தாள்.

அந்த ஓவியம் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம் "நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும் "என்று கூறிக் கொண்டே தன் கைகளால் எடுத்து, தன்னுடைய மூச்சுக் காற்றை ஓவியத்தின் மேல் படும்படி செய்தார். இந்த அற்புதத்தை கண்ட பார்வதி தேவி, மகிழ்ச்சி அடைந்து அந்த குழந்தைக்கு 'சித்திர குப்தன்' என்று பெயர் வைத்தாள்.
 
ஒரு நாள் யமதர்ம ராஜவுக்கு மனக்கவலை அதிகமாகிக் கொண்டே போனது. தன்  மனக்கவலையை சிவனிடம் சொன்னார். இறக்கும் ஜீவராசிகளை அழைத்து வரும்போது அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும்  என்று நீங்களும், விஷ்ணு பகவானும் எனக்கு கட்டளையிட்டு இருக்கீர்கள்?. ஆனால் யார் எவ்வளவு பாவ, புண்ணியங்கள் செய்தார்கள் என்று  தன் மனக்கவலையை தெரிவித்தார் யமதர்மராஜா.
 
உன் கேள்விகளை, "அனைத்து உயிர்களை படைக்கும் பிரம்மாவிடம் போய் கேள், இதற்கு தீர்வு சொல்வார் "என்று சிவபெருமான் கூறினார். பிரம்மாவிடம் சென்று தன் கவலைகளை சொன்னார் யமதர்ம ராஜா.
 
பிரம்மா யமதர்மரிடம், சக்தியால் உருவாக்கப்பட்ட சித்திர குழந்தையான சித்ர குப்தனை உன் யம லோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-புண்ணியம் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன்  கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனக்கவலை ஒழிந்து உன் தர்மபடி பணி செய் என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மதேவர்.
 
பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன் தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும், மறு கையில் எழுதுகோலும் தேவையான மை நிறைந்த  கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார்.
 
அன்றியிலிருந்து இன்று வரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்த ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்ர குப்தன் எழுதி வருகிறார். ஆதலால் நாம் பாவங்கள் செய்வதை விடுத்து, புண்ணியத்தை மட்டுமே செய்ய வேண்டும். சித்திர குப்தன் நம்மை “இந்த  ஆத்மா புண்ணிய ஆத்மா” என்று அவனது ஏட்டில் எழுதி விட்டால் அடுத்த பிறவி இல்லை அல்லது எந்த பிறவி எடுத்தாலும் துன்பம் நிலை  இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.