வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மஹா வராஹியின் மூல மந்திரமும் வழிபாட்டு முறைகளும் !!

பஞ்சமி தினம் வாராஹியை வழிபடுவதற்கான, அவளை ஆராதிப்பதற்கான அற்புதமான நாள். வாராஹி தேவிக்கு அவளுக்கு செந்நிற மலர்கள் அணிவித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருள்வாள் வாராஹி.
 

வீட்டில் விளக்கேற்றி வாராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.
 
எதிரிகளின் தொல்லைகளால் கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் வராகி அம்மனின் மூல மந்திரத்தை 26 நாட்கள் தினமும் ஜெபம் செய்து வர அவளின் அருள் கிடைக்கும்.
 
மஹா வராஹி மூல மந்திரம்:
 
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா
 
பூஜை முறைகள் : வராஹி அம்மனை வழிபடுபவர்கள் வெள்ளை மொச்சைப் பருப்பை வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய்யை கலந்து நைவேத்தியமாக படைத்து வழிபட்டு வர வேண்டும். இப்படி தினமும் வராகி அம்மனை வழிபட்டு வருவதால் எதிரிகளின் தொல்லை நீங்கும், அதோடு தன வசியம் ஆகும், தொழில், வியாபாரம் விருத்தி அடைந்து செழிக்கும்.
 
சப்தமாதர்களில் ஒருவராகத் திகழும் வாராஹிதேவியை வணங்குவோம். மனோபலம் பெருகும். தடைகள் அகலும். இதுவரை தடைப்பட்டு வந்த விசேஷங்களும் மங்கல காரியங்களும் இனிதே நடைபெறும்.