வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்...!!

வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடுவது மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ஒன்றாகும். காலையில் எழுந்த உடன் முதலில் நாம் குளித்துவிட்ட பின்னர் வணங்க  வேண்டும்.

துளசியை கிழக்கு திசையில் தரை மட்டத்தில் வைத்து பெண்கள் வழிபடுவதின் மூலம் நல்ல ஆரோக்கியம் உண்டாகும் வடக்குப் பக்கம் தாழ்வாக துளசி மாடத்தை  வைத்தாலும் நல்லது.
 
காலையில் தினமும் இந்த துளசி மாட பூஜைகளை செய்த பின்னர் வழக்கம் போல் அனைவரும் செய்யும் பூஜை சாஸ்திரங்களை உங்கள் பூஜை அறையில் செய்து  கொள்ளலாம்.
 
துளசி மாட பூஜையை செய்து வந்தோம் என்றால் வீட்டில் துளசியின் அருள் நமக்கு கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் மகாலக்ஷ்மி மற்றும் நாராயணரின் அருள்  வீட்டிற்கு கிடைக்கும்.
 
துளசி மாடம் எங்கு உங்களின் வீட்டில் வைத்திருக்கிறீர்களோ அங்கு சென்று மாடத்தின் கீழ் விளக்கு ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். துளசி மாடத்தின் பூஜைக்கு  பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். அடுத்ததாக பூஜைக்கு செய்யும் பூஜை மணி, அதன் பிறகு கற்கண்டு, இல்லையென்றால் திராட்சை பழ வகைகளை  பூஜைக்கு வைத்து கொள்ளலாம்.
 
விளக்கு ஏற்றிய பிறகு துளசி மாடத்திற்கு சூடம் ஏற்றி பத்தி, சாம்பிராணி போன்றவை காட்ட வேண்டும். சாம்பிராணி காட்டிய பிறகு பஞ்ச பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரை நெய்வேதனம் செய்த பிறகு மீதமுள்ள தண்ணீரை எல்லாவற்றையும் அந்த துளசி மாடத்திற்கு ஊற்றவேண்டும்.
 
துளசியின் இலைகள் விஷ்ணுவின் வடிவம் ஆகும். அதனால் வீட்டில் துளசி செடி வைத்து வழிபட்டால் விஷ்ணுவின் பரிபூரண அருள் கிடைத்து வாழ்வில் ஏற்றம்  உண்டாகும்.