தொடர்புடைய செய்திகள்
- சாம்பிராணியின் வகைகளும் அதனை தூபம் போடுவதால் உண்டாகும் பலன்கள்...!!
- வீட்டில் வெண்கடுகு சாம்பிராணி தூபம் போடுவதால் ஏற்படும் பலன்கள்....!
- வெண்கடுகை சாம்பிராணி புகை போடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன...?
- வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டும் வெண்கடுகு சாம்பிராணி!!
- இயற்கையான முறையில் கொசுக்களை விரட்ட வழிகள்...!
நன்மை தரும் மூலிகை தூபங்களும் அதன் பலன்களும்...!!
துளசி தூபம்: திருமணத்தடை, வீடு கட்டுதல், போன்ற பல தடைகளை தாண்டி வாழ்க்கையில் வெற்றி அடைய துளசி தூபம் சிறந்ததாக அமையும். திருமணம் ஆகி சேர்ந்து வாழாதவர்கள், திருமணத்தடை ஏற்பட்டவர்கள் அனைவருக்கும் துளசி தூபம் நன்மை செய்யும்.
வெள்ளை குங்கிலியம் தூபம்: வீட்டில் எந்த ஒரு நல்ல செயலையும் செய்ய விடாமல் தடுக்கும் துர்ஷ்ட ஆவிகள் வீட்டில் இருந்து விலக வெள்ளை குங்கிலியம் தூபம் சிறந்ததாகும். இதனால் அந்த ஆவிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும்.
வெண்கடுகு தூபம்: வெண்கடுகு தூபம் போடுவதால் பகைமை உணர்ச்சி குறைந்து பகைமையை மறந்து நட்புறவு ஏற்படும். அன்பும் அரவணைப்பும் உண்டாகும்.
வெட்டிவேர் தூபம்: எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன் வெட்டிவேர் தூபம் போட்டு ஆரம்பித்தால் தொட்ட காரியம் வெற்றி அடையும். நிறைவேறாத எண்ணங்கள் நிறைவேறும்.
வேப்பஇலைதூள் தூபம்: நீண்ட நாள் நோயால் பாதிக்கபட்டவரைகூட எழுந்து உட்கார வைப்பது வேப்பஇலைதூள் தூபம். வேப்பஇலைதூள் தூபம் போடுவதால் நோயின் தாக்கம் சிறிது சிறிதாக குறைய தொடங்கும்.
அடுத்த கட்டுரையில்
