செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆன்மிக வழிபாடு செய்யும்போது நாம் கடைப்பிடிக்கவேண்டிய செயல்கள்

கோவிலுக்கு புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு  தேவை. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது நல்லது. யாரிடமும் கடன் வாங்கிச் செல்லவேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.


 
 
விநாயகருக்கு ஒன்று, தனி அம்பாளுக்கு இரண்டு, சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம்வாருங்கள். ஒரு பிரதட்சிணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி, பின் அடுத்ததைத் துவங்கவும்.
 
கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக்கூடாது. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்றவேண்டாம். நெய் அல்லது எண்ணெய்யை பிற விளக்குகளில் ஊற்றவேண்டாம். அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
 
பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய்துகொண்டிருக்கும் சமயம்,  யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
 
பரிகாரம் செய்தபின் பூஜைப் பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை  அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
 
போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்; தோஷமில்லை. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.