Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் செல்வம் நிலைக்க அற்புத பரிகார முறைகள்....!

Written By Sasikala
Updated: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (13:15 IST)
 
வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி கல் இவைகளில் உட்காரக்கூடாது. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக்  கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
 
சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.  வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.
 
எழவு என்றும் கூறக்கூடாது. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில்  சிந்தக்கூடாது.
 
அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால்  நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.
 
லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments