தொடர்புடைய செய்திகள்
- சூரபத்மனுக்கு எதிரான போருக்கு புறப்பட்ட முருகப்பெருமான் !!
- சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காகத்தான் முருகனின் அவதாரமா...?
- சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட புதிய சக்தியின் தோற்றம்தான் முருகப்பெருமானா...!!
- குருவிற்குரிய பரிகார ஸ்தலமாக திருச்செந்தூர் இருப்பது ஏன்...?
- சூரிய வழிபாடு செய்ய உகந்த நாள் எது தெரியுமா...?
பிண்ணி கொண்டிருக்கும் பாம்பின் உருவமும் பலன்களும் !!
இரண்டு பாம்புகள், சர்ப்பங்கள் ஒரு தடியை பிண்ணி கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும் முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும் காணலாம்.
அது போன்ற குறியீடு சிவன் கோயில், அம்மன் கோயில் வளாகங்களிலும், அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம். ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும். இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால், அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும்.
நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை இரண்டு பாம்புகள் பிண்ணி கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள் கோயில்களில் தரிசித்து வந்தார்கள். இதனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள். இந்த விஷயம் தற்கால மனிதர்களுக்கு தெரியாது.
ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு, ரோகக்காரகன் நோய்க்கு காரணமானவன், சத்ருகாரகன் பகைக்கு காரணமானவன் ருணக்காரகன், கடன் தொல்லைக்கு காரணமானவன் என்று பெயர். இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீச்சம் அடைகிறது. அதாவது செயலற்று போகிறது. "ஆயில்யம்" என்றால் "பிண்ணி கொள்வது" அல்லது "தழுவிகொள்வது" என்று பொருள்படும்.
இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் உருவம் பிண்ணி கொண்டிருக்கும் பாம்பின் உருவமாகும். எனவே பிண்ணி கொண்டிருக்கும் பாம்பின் உருவத்தை தினமும் தரிசித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும்.
அடுத்த கட்டுரையில்
