செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிவனுக்குரிய வழிபாடுகளில் சோமவார பிரதோஷத்தின் சிறப்புகள் !!

சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.

சிவ ஆலயங்களில்  சோமவாரப் பிரதோஷம் நடைபெறுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.
 
உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன்.  இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்.
 
பிரதோஷம் நித்ய பிரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.
 
திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரம் திரயோதசி ஆகிய மூன்றும் ஒன்றாக வரும் அபூர்வ நாள் இந்த அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
 
இந்த அபூர்வ பிரதோஷம் அன்று நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
 
ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனை தீரும், திருமணம் தடை நீங்கும். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.