1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கருப்பு மஞ்சளை வைத்திருப்பதால் என்ன பலன்கள் தெரியுமா...?

கருப்பு மஞ்சளை காளியின் அம்சம் கொண்டதாக உள்ளது. இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது. 

இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். மேலும் ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.
 
பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம்.
 
கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்த்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்.
 
கருப்பு மஞ்சளை பைகளில் வைத்திருந்தால் வெற்றியை தேடித்தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வராத பணமும் கைக்கு வரும். ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருப்பு மஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும். ஜன வசியம், பணவசியத்திற்கு ஏற்றது கருப்பு மஞ்சள்.
 
கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.