மஹா பெரியவரின் அற்புத பொன்மொழிகள் !!
அன்பால் பிறரைத் திருத்தி நல்வழிப்படுத்த முடியும். அன்பால் ஒருவரை திருத்தினாலும் கூட அது பெருமை தரும் விஷயம் தான்.
* பாவ புண்ணியம் என்பது செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும் நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவக்கணக்கில் தான் சேரும்.
* தியானம் செய்வது பிறருக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மனதுக்குள் தாயாரைச் சதா நினைத்துக் கொண்டிருந்தால் போதும்.
* ஆசை, கோபம், துவேஷம், பயம் ஆகிய தீயசிந்தனைகளை மனதை விட்டு அடியோடு அகற்ற வேண்டும். உயர்வு தரும் நல்ல சிந்தனைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
* ஒருபோதும் விருப்பு வெறுப்புடன் செயலாற்றுவது கூடாது. மனச் சமநிலையுடன் செயலாற்றும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அகந்தையுணர்வு இல்லாமல் மனிதன் கடமைகளைச் செய்யவேண்டும்.
* அறியாமை என்பது வியாதிக்குச் சமமானது. அறியாமை நம்மிடம் இருக்கும் வரை மகிழ்ச்சி உண்டாகாது.
* எந்த வீட்டில், யார் இறக்கும் தறுவாயிலிருந்தாலும் யாரும் கூப்பிடாமலேயே அங்கு சென்று 1008 தடவை ராமநாமம் சொல்லிவிட்டு வர வேண்டும். அந்த ஆத்மா முக்தி அடைந்துவிடும். இது ஜீவாத்ம கைங்கர்யம்.