1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (15:13 IST)

பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியின் சிறப்புகள் !!

பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன.


இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணங்களோடு மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது.

இம்மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க ஆரம்பிப்பதால் இம்மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது.

இந்து மதத்தில் ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பொதுவாக பௌர்ணமி தினம் என்றாலே குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். 

பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், எல்லோரும் அவசியமாக குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். மற்ற நாட்களில் வழிபாடு செய்து பலன் பெறுவதை விட, இந்த பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், இரட்டிப்பு பலனை பெறலாம்.