வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பூஜை அறையில் கவனிக்கவேண்டிய சில முக்கிய குறிப்புகள் !!

பூஜையின் முழுபலன் கிடைக்க பூஜையின்போது இவற்றில் கவனம் செலுத்துங்கள்… பூஜைக்கு வைக்கப்படும் வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். 

வெற்றிலைபாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது. நமக்கு இடப்பக்கமாவும், சுவாமிக்கு நமக்கு மிஞ்சியை சக்தியை இறை என்றுணர்ந்து, இறையின்பால் நம்பிக்கை வைப்பது எப்போதும் நல்லது.
 
பூஜைக்கு வைக்கப்படும் வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைபாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது. நமக்கு இடப்பக்கமாவும், சுவாமிக்கு வலப்பக்கமாவும் வெற்றிலைக்காம்பு இருக்க வேண்டும்.
 
தினசரி பூஜைக்கு அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நைவேத்தியமாய் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்துதான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். புழுங்கல் அரிசி கடவுளுக்கு படைக்க ஏற்றதில்லை.
 
தேங்காயை உடைத்தப்பின், முக்கண் இருக்கும் தேங்காயின் மேல்பாகம் நமக்கு இடைக்கைபக்கம் கடவுளுக்கு வலப்பக்கமாக இருக்க வேண்டும். தேங்காயின் கீழ்ப்பாகம் நமக்கு வலப்பக்கமும் கடவுளுக்கு இடப்பக்கமும் இருக்க வேண்டும்.
 
வினாயகரை துளசியால் அர்ச்சிக்கக்கூடாது. அதுப்போல் வைணவ கடவுளுக்கு அட்சதையும், சிவனுக்கு தாழம்பூவும், திருமகளுக்கு தும்பை பூவும், சரஸ்வதிக்கு  பவளமல்லியும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு ஏற்றதல்ல.
 
வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்களும், அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ,  ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விருச்சிப்பூ பூஜைக்கு ஏற்றது.
 
சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஆகாது என சொல்வார்கள். கடவுள் படைப்பில் எதுவுமே ஒதுக்கி வைக்கப்படுவதில்லை. இவற்றை பூஜையின்போது பயன்படுத்தாமல் சுவாமி அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.