எந்த திருஷ்டி தோஷமும் நம்மை பாதிக்காமல் இருக்க பரிகாரங்கள் !!

crystal Salt
Sasikala|
எல்லாருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய 2 முக்கிய பொருட்கள் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் செல்வம் சேர இது போல் செய்யுங்கள். ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கிய இரண்டு பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். 


இந்த பொருட்கள் மிகவும் தெய்வாம்சம் பொருந்திய பொருட்கள். இந்த இரண்டு பொருட்களும் வீட்டில் இருந்தால் எந்த திருஷ்டி தோஷமும் உங்களை நெருங்காது. யாருடைய கண் திருஷ்டிகள்,  பொறாமை பார்வைகளும் உங்கள் மேல் விழாது பாதுகாத்து அரணாக நிற்கும். 
 
பித்ரு தோஷம் நீங்கவும் வீட்டில் எப்போதும் இந்த பொருளை வைத்திருக்க வேண்டும். சதா வீட்டில் சண்டை, சச்சரவுகள், வாக்குவாதம் என்று நிம்மதி இல்லாத  வாழ்க்கை தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். இதனை சரிசெய்ய வீட்டில் இருக்கும் இந்த பொருள் உங்களுக்கு தினமும் பயனுள்ளதாக இருக்கும்.
 
வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஓரையில் அடிக்கடி இந்த பொருளை வாங்கி வந்து அதற்குரிய இடத்தில் சேர்த்து விடவேண்டும். எப்பொழுதும் இந்த பொருள் நிரம்பியே இருந்தால், வீட்டில் மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும், செல்வத்திற்கும் குறை இருக்காது என்பார்கள்.

komiyam
குறைவில்லாமல் நிறைவாக இருக்க வேண்டிய அந்த பொருள் கல் உப்பு. வேறு ஒன்றும் இல்லை. கல் உப்பு லட்சுமியின் அம்சமாக இருப்பதால் இந்த பொருள்  வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். அதுபோல் அந்த இரண்டாவது பொருள் பசுமாட்டு கோமியம். பசுமாட்டு கோமியம் மிக முக்கியமாக நம்முடைய வீட்டில்  எப்போதும் வைத்திருக்க வேண்டும். பசு மாட்டின் கோமியத்தில் திருஷ்டியை நீக்கும் ஆற்றல் உண்டு. 
 
தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில், சிறிதளவு கல்லுப்பு, சிறிதளவு கோமியம் ஊற்றி, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து வீடு முழுவதும் தெளித்து வந்தால் எந்த ஒரு திருஷ்டியும், உங்களை ஒன்றும் செய்யாது. திருஷ்டி நீங்கும், பித்ரு தோஷம் நீங்கும், அதனால் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் விலகி நல்ல வருமானம்,  லாபம் பெருகும்.


இதில் மேலும் படிக்கவும் :