தண்ணீரில் விளக்கு ஏற்றி சாய்பாபா செய்த அற்புதம் !!

Sasikala|
சீரடியில் சாய்பாபா தங்கி இருந்த இடத்தில் இரவு நேரத்தில் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அந்த அகல் விளக்குகளுக்கு, அங்கேயிருந்த வியாபாரிகள் எண்ணெய் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்.

சாய்பாபாவின் மீது பொறமை கொண்ட சிலர், அந்த வியாபாரிகளிடம் சென்று இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, இனி மேல் நீங்கள் எண்ணெய் கொடுக்க வேண்டாம். சாய்பாபா உங்களை எல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். அதை நம்பிய வியாபாரிகளும் விளக்கு எரிய  தேவையான எண்ணெய் வழங்குவதை நிறுத்தி விட்டார்கள்.  
 
ஒருநாள் விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாமல் பக்தர்கள் தவித்தனர். பின்னர் சாய்பாபாவிடம் சென்று எண்ணெய் தருவதை நிறுத்திவிட்டதை தெரிவித்தார்கள்  “சாய்பாபாவின் ஞான திருஷ்ஷயில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டார்”. அவருக்கு சிரிப்பு தான் வந்தது. இனிமேல் நமக்கு எண்ணெய் வேண்டாம்.   “தண்ணீரிலேயே விளக்கு ஏற்றுங்கள் என்றார் சாய்பாபா”. பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாமல் குழம்பினார்கள்.
 
சாய்பாபா மறுபடியும் சொன்னார். தண்ணீரை ஊற்றி விளக்கை ஏற்றுங்கள் என்றார். பக்தர்கள் தயங்கியபடியே அவ்விதமே செய்ய, அகல் விளக்குகள் எண்ணெய்யில்  எரிவதை விட பிரகாசமாக எரிந்தன.

இதைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியம் அடைந்து மகிழ்ச்சியில் இருந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட வியாபாரிகள் தங்கள் தவறை உணர்ந்து சாய்பாபாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :