Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா பிரச்சனைகளையும் எளிதில் தீர்க்கும் காமதேனு வழிபாடு...!!

Written By Sasikala
Updated: வெள்ளி, 10 ஜூலை 2020 (16:20 IST)


பூஜை அறையில் காமதேனு விக்ரகம் இருப்பது நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும்.  விக்ரகம் இல்லாதவர்கள் காமதேனு படத்தை வைத்து பூஜை செய்யலாம். 
 
கன்றுடன் இருக்கும் காமதேனு படமோ அல்லது விக்ரகமோ பூஜையறையில் வைத்து வழிபடவேண்டும். விக்ரகம் வைத்து வழிபடுவோர் தினமும், அதற்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் பாலாபிஷேகம் செய்து வருவதன்மூலம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக முற்றிலுமாக  நீங்கிவிடும். 
 
அபிஷேகம் முடித்து, காமதேனு விக்ரகத்தின் கொம்பு, நெற்றி, கால்கள், மடி பகுதியில் மஞ்சள், குங்குமம் இட வேண்டும். கன்றிற்கும் இது போல் மஞ்சள், குங்குமம்  இடவேண்டும். காமதேனுவிற்கு மல்லிகைப்பூ சாற்ற வேண்டும். பின்னர் காமதேனு படத்தை தொட்டபடி, கோரிக்கைகளை மனதார வேண்டி இந்த மந்திரத்தை 54  முறை உச்சரிக்க வேண்டும்.
 
காமதேனு மந்திரம்:
 
ஓம் சுபகாயை வித்மஹே!
காமதாத்திரியை, சதீமஹி தந்னோ
தேனு ப்ரசோதயத்.
 
இந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.  கடன் தொல்லைகள் நீங்கும். பசுவை தெய்வமாக நினைத்து போற்றுபவர்களுக்கு எந்த விதமான கஷ்டங்களும் வாழ்வில் ஏற்படாது. பசுவிற்கு தானம் அளிப்பது ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்களையும் போக்கி விடும். 
 
கர்ம பலன்கள் குறைய தொடர்ந்து பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசுவின் கோமியத்தை வீட்டை சுற்றி தெளித்து வர எந்த கெட்ட சக்தியும் உங்களது குடும்பத்தையே நெருங்கவிடாமல் செய்யும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments