Daily Horoscope
✕

ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா...?

Updated: வியாழன், 19 ஏப்ரல் 2018 (12:15 IST)
 
ஸ்படிகம் என்பது ஒரு வகை கிரிஸ்டல். தூய்மையான நிலையில் கண்ணாடி போலக் காணப்படும். இது மிகவும் குளிர்ந்த தன்மையது. அதனால் இதன்  மணிகளை மாலையாகக் கோத்து பெரியவர்கள் அணிவதும் உண்டு. ஸ்படிகம் இமய மலையின் அடி ஆழத்திலும் விந்திய மலை மற்றும் சங்ககிரி மலையின்  சில பகுதிகளிலும் கிடைக்கும். இது மிகவும் விலைமதிப்புள்ளது.
 
வியாபாரிகள் இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டிலோ தங்கள் வியாபாரக் கேந்திரத்திலோ வைத்து வழிபடலாம். முறைப்படி பூஜிப்பதால் ஸ்படிகம் தன ஆகர்ஷண  சக்தி படைத்ததாக மாறுகிறது. அதனால் நல்ல லாபம் கிடைப்பதுடன் தொழிலும் மேலும் மேலும் விருத்தியடையும். மாணவர்களும் கூட ஸ்படிக லிங்கத்தை  வீட்டில் வைத்து வழிபடலாம். தொடர்ந்து இதைப் பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தாலே நல்ல ஞாபக சக்தி, விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல்  ஆகியவை கிட்டும். இதற்கு தினமும் பூஜை செய்ய நல்ல மனத்திண்மையும் நேர் வழியில் செல்ல விருப்பமும் உண்டாகும். மொத்தத்தில் இந்த சமுதாயத்தில்  இருக்கும் எல்லோருக்கும் ஸ்படிகம் நன்மையே செய்யும்.

எல்லாம் காட்டு

நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. 4,100 போலீஸார் குவிப்பு... கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

இன்று தீபாவளி திருநாள்.. லட்சுமி பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்...

தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணமாக அமையட்டும் - சத்குருவின் தீபாவளி வாழ்த்து!..

தீபாவளிக்கு முன்பு எந்த பொருளையெல்லாம் தூக்கி வீசணும்? - வாங்க பார்ப்போம்

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments