1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வீட்டின் வளம் பெருக வேண்டுமா?; செய்யக்கூடாதவை...!

கோபுர நிழல் அல்லது கொடிமரத்தின் நிழல் நம்முடைய மனையின் மீது விழாதபடி வீடு கட்ட வேண்டும். மேலும் பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன், கணபதி கோவில் எதிர்புறம் வீடு கட்டக் கூடாது.
வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும். பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை  ஆண்களையும் குறிக்கும்.
 
முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
 
ஜாதி, முல்லை, மல்லிகை, பாதிரி, தாமரை, தும்பை, பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்ப்பது  மனை தோசத்தை சரி செய்யும்.
தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது.
 
நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டப்பட்டால், அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம், ஆரோக்கியம் கெட்டு  விடும்.
 
துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது.
 
ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில் வீடு கட்ட கூடாது.
 
வீட்டின் வாசலில் அல்லது நில கதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது.
 
அசைவ கழிவுகள மல மூத்திர கழிவு தேக்கம், பழைய துணிகள், குப்பைகள் போன்றவற்றை வாசலில் இருக்க கூடாது.
 
சந்தன முல்லை, துளசி, பவளமல்லி, பன்னீர் செடி, திருநீர்பத்திரி, கற்பூரவள்ளி போன்ற தெய்வீக வாசனை தாவரங்கள் வளர்த்துவந்தால்,  அம்பாளின் அருள் ஆசிகள் கிடைக்கும்.