1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (16:55 IST)

பயன் தரும் சில ஆன்மிக குறிப்புக்கள் சிலவற்றை பார்ப்போம் !!

வீட்டு வாசல்படியில் நற்பவி என்று எழுதி வைக்க நன்மைகள் நடக்கும். மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் பெருகும்.


வீட்டு வாசல்படியில் நற்பவி என்று எழதி வைக்க நன்மைகள் நடக்கும். வலம்புரி சங்கின் சப்தம் கேட்டும் இடத்தில் பணபுழக்கம் அதிகரிக்கும்.

பிராமணர்களுக்கு அன்னதானம் அளகத்தால் சகல தோஷங்களும் நீங்கும் செல்வ செழிப்பு உண்டாகும். தினமும் சுத்தமான பசும்சாண விபூதி நெற்றியில் உடலில் பூசி வந்தால் லக்ஷ்மி கடாஷம் உண்டாகும்.

வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் துளசி செடி வில்வம் மரம் நெல்லி மரம் மல்லிகை செடி வளர்த்து வந்தால் செல்வம் அதிகரிக்கும்.

வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சாளகிராமம் ருத்திராச்சம் தாமரை பாதரசம் பசும்சாணம் வைத்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.

தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை துணியை அலசி பிழியும் தண்ணீர் துடைப்பதின் புழுதி புடைக்கும் முறத்தின் காற்று உடலில் பட்டால் தரித்திரம் உண்டாகும். நகம் தலைமுடி மிதக்கும் தண்ணீரை குடிக்கக்கூடாது.

தினம் தூய்மையான உடை அணிய வேண்டும். இருட்டிலும் விளக்கு இல்லாத இடத்திலும் படுத்து தூங்கக்கூடாது. விளக்கேற்றிய பின் குப்பையை பெருக்கக் கூடாது. எச்சில் கையால் தலையை தொடக்கூடாது.