1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (10:16 IST)

சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஏன் தெரியுமா...?

ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வரும் என்றாலும், சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

சனி அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணமும், அவர்களை நினைத்து செய்யும் நல்ல காரியங்களாலும் பலன்கள் அதிகரிக்கும். முன்னோர்களின் ஆசியால் இதுநாள்வரை தடைபட்டு வந்த காரியங்கள் எளிதில் நடைபெறும். 
 
நாம் கொடுக்கும் தர்ப்பணத்தில் மகிழ்ச்சியடையும் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதிப்பார்கள். இதனால் தரித்திரம் விலகும் ஐஸ்வர்யம் பெருகும். எனவே மறக்காமல் சனி அமாவாசை நாளில் மறக்காமல் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியை பெறலாம்.
 
சனிக்கிழமை தினத்தில் அமாவாசை வருவது விஷேசமானது. அன்றைய தினம் சனிபகவானையும் வழிபடலாம். முன்னோர்களையும் வழிபட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலிட்டு இயலாதவர்களுக்கு தானம் கொடுக்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். 
 
நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.
சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்
 
ஏழரை சனி நடைபெறுகிறது என்றால் அந்த பாதிப்பில் இருந்து விடுபட சனி அமாவாசை நாளில் அரசமரத்தை வழிபட வேண்டும். அரச மரத்தில் தெய்வங்களும், முன்னோர்களும் வசிக்கிறார்கள் என்ற ஆன்மீக நம்பிக்கை உள்ளது. அரச மரக் கன்றை நடுவதன் மூலம் ஜாதகத்தில் உள்ள சனி தோஷங்களும் நீங்கும்.