1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 1 ஜூன் 2022 (13:19 IST)

கிருஷ்ணனது லீலைகள் சிலவற்றை பார்ப்போம் !!

Lord Krishna 1
கம்சனால் அனுப்பப்பட்ட பூதகி என்னும் அரக்கி, ஓர் அழகிய வடிவில் நந்தகோபர் வீட்டில் சேர்ந்து, அனைவரையும் மயக்கி குழுந்தையை ஆசையுடன் எடுத்து, மார்போடு அணைத்துக் கொண்டு விஷம் நிறைந்த பாலை ஊட்ட, பகவான் கிருஷ்ணன் அவள் மார்பகத்தைப் பற்றிக் கொண்டு பாலைக் குடிப்பது போல் அவள் உயிரையே குடித்துவிட்டார்.


அவளும் சுயஉருவில் சாய்ந்து இறந்தாள். யசோதையும், ரோகிணியும் ஓடிவந்து குழந்தையை எடுத்து அதற்குத் திருஷ்டி கழித்து பாலூட்டி ஒரு வண்டியின் கீழுள்ள தொட்டிலில் கிடத்தினர்.

அப்போது குழந்தை அழுதது. கால்களை உதைத்துக் கொள்ள கால்கள் பட்டதும் வண்டி உடைந்து விழ அரக்கன் சகடாசுரன் சுயவடிவில் இறந்தான்.

அடுத்து காற்று வடிவில் குழந்தையை தூக்கிச் சென்ற அரக்கன் திருணாவர்த்தனையும் கண்ணன் கொன்றுவிட்டான்.

கர்க்க முனிவர் நந்தகோபன் விருப்பப்படி மங்கல காரியங்களைச் செய்து ரோகிணி புத்திரனுக்குப் பலராமன் என்றும் யசோதை மகனுக்கு கிருஷ்ணன் என்றும் நாமகரணம் செய்து வைத்தார்.