புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எவ்வாறெல்லாம் விரதமிருக்கலாம் தெரிந்துகொள்வோம்...!!

மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு விரதம் இருத்தல்.
 
ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் திணை  மாவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.
 
ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது)  மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.
 
தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு  பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என விரதம் இருத்தல்.
 
ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி  விரதம் இருத்தல்.
 
ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி விரதம் இருத்தல். இரு வேளை உணவுடன் விரதம் இருத்தல். முதல் நாள் ஒரு வேளை  பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் விரதம் இருத்தல்.