கரூர்: ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி விஷேச அலங்காரம்

Kalyana Pasupatheeswarar
ஆனந்த குமார்|
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியான த்ரியம்பகா அஷ்டமியை முன்னிட்டு ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியான த்ரியம்பிகா அஷ்டமியை முன்னிட்டு ஆலயத்தின் வலதுபுறம் அமைந்திருக்கும்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காலபைரவருக்கு விஷேச அபிஷேகங்களும் தொடர்ந்து விஷேச அலங்காரங்களும் செய்யப்பட்டு, ஆரத்தி, கோபுர ஆரத்தி, நாக ஆரத்தி,  கற்பூர ஆரத்திகளும், ஷோடசம்ஹாரங்களும் இதை தொடர்ந்து மஹா தீபாராதனைகளும் செய்யப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத்துறையினரும் சிறப்பாக செய்திருந்தனர்.
 
இந்நிகழ்ச்சியில் பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை திரியம்பகாஷ்டமி என்று சொல்லுவார்கள் ஆச்சார்யர்கள். இந்த நாளில், பைரவரை வழிபடுவதும் அன்னதானம் செய்வதும் ஐஸ்வரியத்தை அள்ளித் தரும் என்பது ஐதீகம். அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பதாக ஐதீகம். 
 
எனவே, தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவரை வணங்கினால், அஷ்டலட்சுமியரின் அருளும் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அது போல பல்வேறு  பக்தர்கள், கரூர் மாவட்டம் மட்டுமில்லாது, திருச்சி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அஷ்டமி தரும் அஷ்டமி  தேய்பிறையில் கலந்து கொண்டு காலபைரவர் அருள் பெற்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :