கரூர்: ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தி நிகழ்ச்சி

ஆனந்த குமார்|
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தி நிகழ்ச்சி – பக்தர்கள் ஏராளமானோர் கலந்து  கொண்டு சித்தி விநாயகர் அருள் பெற்றனர்.
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது. முன்னதாக மூலவர் விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கும், உற்சவருக்கும் மஹா சிறப்பு அலங்காரங்களும், கும்ப ஆரத்தி, கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சங்கடங்களை தீர்க்கும் மஹா விஸ்வகர்மா சித்தி விநாயகர் அருள் பெற்றனர்.  இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா சிறப்பாக செய்திருந்தனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :