திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர்: ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா!!

அருள்மிகு ஸ்ரீ கரூர் மஹா மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு புனிதநீர்ஊற்றினர்.
ஆண்டு தோறும் கரூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் வைகாசி பருந்திருவிழா வெக விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு கடந்த 12 ம்  தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்த அம்மன் நாள்தோறும் அம்மன் எதிரே நடப்பட்ட மாவடியான் என்று அழைக்கப்படும்  கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை வழிப்பட்டு வருகின்றனர். அதோ போல் இரவு நேரங்களில் அம்மன் பல்வேறு வாகனத்தில்  திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நாளை காலை திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. 
 
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் வெய்யிலில் நின்று கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். விழாவில் முக்கிய நிகழ்வுகளான அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்துதல் உள்ளிட்ட  நிகழ்ச்சிகள் திங்கள், செவ்வாய், புதன் உள்ளிட்ட மூன்று நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். 
 
மள்ளர் மாவிக்கு என்று சொல்லகூடிய மாவிளக்கு செவ்வாய் இரவு கொண்டு வரப்படும். பின்னர் புதன்க்கிழமை மாலை கம்பத்தை கரூர் அமராவதி ஆற்றில் விடப்படும். விழா ஏற்பாடுகளை கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம்  சிறப்பாக செய்து வருகின்றனர்.