கரூர்: சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா

கரூரில் சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் பின்புறம் உள்ள சாத்தாணி சந்து பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்கரதாழ்வார் ஆலயம் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் ஜெயந்தி விழா இரண்டு நாட்களுக்கு  வெகு விமர்சையாக நடைபெறும். 
 
இந்த ஆலயத்தில் வந்து வணங்கினால் திருமணதடை,, குழந்தைபேறு, தொழில் வளர்ச்சி, பில்லி சூன்யம் உள்ளிட்ட தீர்வு காண்பதால் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் நாள்தோறும் வந்து வழிபட்டு செல்கின்றனர். முதல் நாளான இன்று துவங்கி ஜெயந்தி விழா காலை 108 லிட்டர் பால்,  பன்னீர், சந்தனம், ஜவ்வாது, தேன், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவ்ய அபிஷேகம் நடைப்பெற்றுது. தொடர்ந்து சக்கரதால்வார்ருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு மஹா தீபாரதனை  காட்டப்பட்டது. 
 
இந்த ஜெயந்தி விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பி்ல் வழங்கப்பட்டது.

 


இதில் மேலும் படிக்கவும் :