காஞ்சி மஹா பெரியவரின் விக்ரஹம் - அபிஷேக மஹா தீப ஆராதனை

காஞ்சி மஹா பெரியவரின் விக்ரஹம் மற்றும் வெள்ளி பாதுகைக்கு கரூரில் பூரண கும்ப வரவேற்பு மற்றும் அபிஷேக மஹா தீப ஆராதனை கரூர் அனுமந்தராயன் கோயில் தெருவில் உள்ள கிராம பஜனை மடத்தில் அனுஷம் வைபவம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
மஹா பெரியவா விக்ரஹம் மற்றும் வெள்ளி பாதுகைக்கு கரூர் பொதுமக்கள் பூரண கும்ப வரவேற்பு அளித்ததோடு, அபிஷேக மஹா தீபாராதனை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. மனிதநேய பண்பாளரும், அனுஷத்தின் அனுக்கிரஹம் அமைப்பாளர் நெல்லை.பாலு  உரைநிகழ்த்தினார். பின்னர் மஹா தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு காஞ்சி மஹா பெரியவரின் அருள் பெற்றனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :