1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. In the Aadi kiruththikai Devotees of Lord Muruga Special fasting!

ஆடி கிருத்திகையில் முருக பக்தர்கள் சிறப்பு விரத வழிபாடு!

ஆடி கிருத்திகை
மாதந்தோறும் வரும் கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள். கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை மற்றும் ஆடிமாதம் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.
 
ஆடி கிருத்திகை அன்று முருக பக்தர்கள் யாவரும் விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். தண்ணீர் மட்டும் அருந்தி  முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவற்றில் ஈடுபடுவதை வழக்கத்தில்  வைத்துள்ளனர்.
எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது.  முக்கியமாக அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் பதினாறு வகையான  திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 
 
முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர  தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால்  பாதிக்கப்பட்டவர்கள், ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (25-07-2019)!