வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஆடியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள்...!

தமிழ் மாதங்களில் சித்திரை, தை மாதங்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது போலத்தான் ஆடி மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. இக்காலத்தில் சூரிய வெப்பம் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலம். பொதுவில் தமிழ் மாதங்கள் சிலவே. அம்மாதங்கள் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரை  மாதத்தின் பெயராக பெற்றுள்ளன. 
சித்திரை நட்சத்திரம் - சித்திரை மாதம், விசாக நட்சத்திரம் - வைகாசி மாதம், ஆஷாட நட்சத்திரம் - ஆஷாட மாதம் - ஆடி மாதம்.
 
இது தக்ஷணாயன கால ஆரம்பம். அதாவது தெய்வங்களுக்கு இரவு நேரம். இக்காலத்தில் தெய்வங்களை வழிபடுவதினையே நம் முன்னோர்கள் சிறப்பு எனக் கூறுகின்றனர். இக்காலம் அதிகம் சக்தி வழிபாட்டிற்கு உரிய காலம். இது தக்ஷணாயன புண்ய காலம். இனி வரும் 6 மாதமும் தேவர்களின் இரவு நேரம். எனவே  தெய்வ வழிபாடு தொடர்ந்து இருக்கும். 
 
ஆடி செவ்வாய் முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய் அன்று முருக கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்வர். பலர் விரதம் இருப்பர். மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மூன்றுமே சக்தி வழி பாட்டிற்கு உகந்ததாகக் கூறப்படுகின்றது. செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு குறிப்பாக துர்க்கை அம்மன்  கோவிலுக்கு செல்லும் பெண்கள் அதிகம். 
 
கல்யாணம் ஆகாத பெண்கள் கல்யாணம் வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்வர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் அம்மனுக்கு பொங்கல் வைப்பது, கூழ் ஊற்றுவது அனைத்து அம்மன் கோவில்களிலும் காணப்படும் ஒன்று. அம்மனுக்கு  வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை, சிகப்பு அரளி மாலை இவை சிறந்ததாகக் கூறப்படுகின்றது.