1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. How to observe Ekadasi fast...?

ஏகாதசி விரதத்தை எந்த முறையில் கடைப்பிடிக்கவேண்டும்...?

ஏகாதசி விரதம்
ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது அஸ்வமேத யாகம் மற்றும் கோதானம் செய்த பலனை கொடுக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. 

வைகுண்ட ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை என்று சிவபுராணம் ப்ரம்மாண்ட புராணம் ஸ்கந்த புராணங்கள் கூறுகின்றன.
 
ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் விரதம் இருந்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். 
 
ஸ்ரீமகாவிஷ்ணு பெருமாளின் புகழ்பாடும் திவ்ய பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், ஸ்ரீ சூக்தம் விஷ்ணு சூக்தம் நாராயண சூக்தம் நாராயண உபநிஷத் தசாவதார ஸ்துதியை பாராயணம் செய்யலாம். மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் புராணங்கள் படிக்கலாம்.
 
ஏகாதசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து ஸ்ரீஹரியை துதி செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் நாமத்தை சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-12-2021)!