வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (11:25 IST)

பிரதோஷ வேளையில் சிவபெருமான் மற்றும் நந்தி வழிபாடு !!

பிரதோஷம் விரதம் இருப்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். 

மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். இப்போது கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் வீட்டிலேயே விரதம் இருந்து சிவபெருமானை வணங்கலாம்.
 
ருணம் என்றால் கடன். கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நோயினால் பலரும் கடனாளியாகின்றனர்.
 
செவ்வாய் கிழமையன்று ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை.
 
ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாவிட்டாலும் சிவனுக்கு பிடித்தமான அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அபிஷேகப்பிரியரான சிவனடியார்க்கு கறந்த பாலில் அபிசேகம் செய்வது சிறப்பு. தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் நன்று. இறைவன் இயற்கையை விரும்பக்கூடியவர். 
 
இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக்கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகலதோஷங்களும், பிரம்மஹத்தி தோஷமும், ஏழு ஜென்மங்களில் உண்டான தோஷமும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.